கூட்டுறவு வங்கிகளில் ரூ75,000 வரை பயிர்க் கடன் தள்ளுபடி- முதல்வர் விஜய் அறிவிப்பு!

Published On:

| By Mathi

CM Vijay Announces Waiver of Crop Loans Up to ₹75,000 in Cooperative Banks

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவு வங்கிகளில் (Cooperative Banks) ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் (CM Vijay) அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு இன்று ஜூன் 16-ந் தேதி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் 25.05.2026 தேதியில் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர் கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

மாநிலம் முழுவதிலுமிருந்து இவ்வினைய விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கிணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட 15.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இம்மறு ஆய்வு கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 இலட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

எவ்வளவு கடன் தள்ளுபடி?

  • 75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு: கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி செய்யப்படும்.
  • 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு: ரூ. 35,000 தள்ளுபடி செய்யப்படும்.

குறு விவசாயிகளில்..

  • 75,000 வரை கடன் பெற்றவர்கள்: 5,22,831 நபர்கள்; கடன் தொகை ரூ. 2,511.37 கோடி.
  • 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்கள்: 3,10,942 நபர்கள்; கடன் தொகை ரூ. 1,088.30 கோடி.
  • மொத்தம்: 8,33,773 நபர்கள்; கடன் தொகை ரூ. 3,599.67 கோடி.

சிறு விவசாயிகளில்..

  • 75,000 வரை கடன் பெற்றவர்கள்: 94,729 நபர்கள்; கடன் தொகை ரூ. 520.33 கோடி.
  • 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்கள்: 4,21,454 நபர்கள்; கடன் தொகை ரூ. 1,475.09 கோடி.
  • மொத்தம்: 5,16,183 நபர்கள்; கடன் தொகை ரூ. 1,995.42 கோடி.

பெரு விவசாயிகளில்..

  • 75,000 வரை கடன் பெற்றவர்கள்: 4,753 நபர்கள்; கடன் தொகை ரூ. 26.36 கோடி.
  • 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்கள்: 88,795 நபர்கள்; கடன் தொகை ரூ. 310.78 கோடி.
  • மொத்தம்: 93,548 நபர்கள்; கடன் தொகை ரூ. 337.15 கோடி.

மொத்தமாக குறு,சிறு, பெரு விவசாயிகளில்

ADVERTISEMENT
  • 75,000 வரை கடன் பெற்றவர்கள்: 6,22,313 நபர்கள்; கடன் தொகை ரூ. 3,058.06 கோடி.
  • 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்கள்: 8,21,191 நபர்கள்; கடன் தொகை ரூ. 2,874.17 கோடி.
  • கடன் பெற்ற மொத்த நபர்கள்: 14,43,504
  • மொத்த கடன் தொகை: ரூ. 5,932.23 கோடி.

அதாவது இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share