Why Silent CM? “பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர் குரல் கேட்கவில்லையா?”… மு.க.ஸ்டாலின் கடும் காட்டம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay Stalin

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்முறைகள் பதிவாகி உள்ளதை சுட்டிக் காட்டி குழந்தைகளை காக்க வேண்டிய போலீஸ் எங்கே என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 16) தனது எக்ஸ் பதிவில், “Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்”

“சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்”

ADVERTISEMENT

என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?

மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ‘கால்ஷீட்’ எப்போது?

ADVERTISEMENT

கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சவாலும் – சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?

இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?

Why Silent CM?” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share