பாஜகவுக்கு தகுதி கிடையாது-இளங்கோவன்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை சத்தியமூர்த்தி பவனில், ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தங்கபாலு, திருநாவுக்கரசர், கோபிநாத் எம்எல்ஏ., கிருஷ்ணசாமி, யசோதா, ஏபிசிவி. சண்முகம் ஆகிய 7 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த இளங்கோவன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும் என்று கலைஞர் சொல்லியிருக்கிறார். அதை நானும் வழிமொழிகிறேன். என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர். திமுக-காங்கிரஸ் கூட்டணியைப் பற்றி விமர்சிக்க பாஜக-வுக்கு தகுதி கிடையாது. விரைவில், திமுக-வுடனான தொகுதிப் பங்கீடுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel