ADVERTISEMENT

குழாய் உடைப்பு : தினசரி வீணாகும் 2லட்சம் லிட்டர் குடிநீர்!

Published On:

| By Kavi

விருதுநகரில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் பிரதான குடிநீர் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.

இதனால், ஒரு குடம் குடிநீர் ஐந்து ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கும் அன்றாடம் காய்ச்சி முதல் வசதியானவர்கள் வரை கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ADVERTISEMENT

விருதுநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருவது ஆணைக்குட்டம் நீர்த்தேக்கம்.

இங்கிருந்து விருதுநகர் நகராட்சி பகுதியில் வசிக்கும்  1 லட்சத்திற்கும் மேற்பட்ட  பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இப்பகுதியிலிருந்து நாள்தோறும் சராசரியாக 30 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு பிரதான குழாய்கள் வழியாக விருதுநகரில் மதுரை சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான  நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

இந்தநிலையில், விருதுநகரில் உள்ள பழைய சிவகாசி சாலை முதல் புதிய சிவகாசி சாலை இணைப்பு வரை  5 இடங்களில் பிரதான குடிநீர் குழாயில்  உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 2லட்சம் லிட்டர் குடிநீர் வரை வீணாகி வருகிறது. 

இந்த உடைப்புகளை சீர் செய்யக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால், குடிநீர் தினசரி வீணாகி வருவது தொடர் கதையாகி வருகிறது. 

எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக விருதுநகர் பழைய சிவகாசி சாலையில் உள்ள குழாய் உடைப்புகளை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சக்தி

நள்ளிரவில் சோகம்: லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்!

“விவசாயத்தை பாதுகாப்போம்” : கன்னியாகுமரி டூ காஷ்மீருக்கு மாட்டுவண்டி பயணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share