கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து நேற்று இரவு லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டு மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டிச் சென்றார்.
பேருந்தானது உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கவனக்குறைவால் ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு எருமை மாடுகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் லாரியில் ஏற்றி செல்லப்பட்ட 4 எருமை மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
விபத்தில் காயமடைந்தவர்களை உளுந்தூர்பேட்டை போலீசார் மீட்டு உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் 10-க்கும் மேற்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா: எடை குறைப்பும் முடி உதிர்வும்… உணவின் பங்கு என்ன?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!