முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான அமைச்சரவையில் பிராமணர்கள் (Brahmins) 2 பேருக்கு இடம் வழங்கியதில் எந்த தவறும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் வைகோ கூறியதாவது: பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி தானே (ஜெயலலிதா) பல்லாண்டு காலம் இந்த தமிழ்நாட்டுக்கே முதலமைச்சராக இருந்தார்? அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகவே இருந்தாரே… ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்னும் பட்டம் பெறுகிற அளவுக்கு, அவர் பிராமண சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், திராவிட இயக்கத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையை ஏற்று ஆட்சி நடத்தினாரே… அவர் பிராமணர்தானே? அதை நினைக்கும்போது, இப்ப ரெண்டு பேர் பிராமண சமூகத்தில் இருந்து வந்ததுனால… அதனால பெரிய பாதிப்பு வந்துட்டதாக நான் நினைக்கல..
நான் பாப்பாத்தி’ என்று சட்டசபையிலேயே ஓங்கி முழங்கினாரு. அவரே பிராமண சமூகத்தைச் சேர்ந்திருக்கும் போது, இன்னொருத்தர் ஒருத்தர் ஏன் அங்க சேர்க்கணும்? தலைமை முத்திரையே பிராமணர்தானே? அதனால, இது ஒரு பொருட்டல்ல…
தவெகவுடன் மதிமுகவுக்கு எந்த நெருக்கமும் இல்லை. இவ்வாறு வைகோ கூறினார்.
