இரவிலும் தொடர் மின்வெட்டு.. விடிய விடிய நடுரோட்டில் கொந்தளித்த மக்கள்! மின்வாரிய அலுவலகங்கள் முற்றுகை!

Published On:

| By Mathi

Midnight Blackouts Trigger Mass Outrage

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து (Midnight Blackouts) நள்ளிரவிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்; மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.

  • கொளத்தூர் தொகுதி பாபா நகர், 200 அடி சாலை பகுதிகளில் நள்ளிரவில் கடுமையான மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டும், செந்தில்நகர் போலீஸ் பூத் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
  • திருவொற்றியூர் விம்கோ நகர், பாரத் நகர் பகுதிகளில் தொடர் மின்வெட்டு குறித்து சரியான பதில் தராத மின்வாரிய ஊழியர்களைக் கண்டித்து அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
  • தண்டையார்ப்பேட்டை ராயபுரம், ஏழுகிணறு, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ஆர்.கே. நகர், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டது.
  • முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மகாகவி பாரதிநகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக இரவு நேர மின்தடை நீடித்தது. இதனால் சர்மா நகர் – எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
  • எம்.எம்.டி.ஏ. காலனி, அபிராமி நகர் பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டதைக் கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
  • புத்தாகரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 7 மணி நேரம் தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடப்பா சாலையில் பொதுமக்கள் மறியல் செய்தனர்.
  • செங்குன்றம், சோழவரம், பாடியநல்லூர் பகுதிகளிலும் மின்தடை நீடித்தது.
  • துரைப்பாக்கம், ஆலந்தூர் முகலிவாக்கம் பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. ஆலந்தூரில் 5 முதல் 6 முறை மின்சாரத் தடை ஏற்பட்டது.
  • பட்டாபிராமில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் சுமார் 17 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
  • திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
  • காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் வாலாஜாபாத் – தாம்பரம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
  • கடம்பத்தூர் பகுதியில் இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருவள்ளூர் – சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதேபோல பல இடங்களில் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share