வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. ஆந்திராவை நோக்கி நகரும்! நவ. 2-ல் நீலகிரிக்கு அலர்ட்!

By Mathi

|

Published on 30 Oct 2026, 4:44 PM

Weather-Nov 2

வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (அக். 31) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் நவம்பர் 2-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக். 30) வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (அக். 29) நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இது தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக். 31) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதன்பின்னர், அடுத்த 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நிலவரம்

அக்டோபர் 30-ந் தேதி: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அக்டோபர் 31-ந் தேதி: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ADVERTISEMENT

நவம்பர் 1-ந் தேதி: வட கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 2-ந் தேதி: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 3-ந் தேதி: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 4-ந் தேதி: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 5-ந் தேதி: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

அக்டோபர் 30-ந் தேதி: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

அக்டோபர் 31-ந் தேதி: தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் இதர தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

நவம்பர் 1-ந் தேதி: மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

நவம்பர் 2-ந் தேதி: ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

இதர ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

நவம்பர் 3-ந் தேதி: ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

இந்த நாட்களில் மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மழை பெய்யுமா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக். 30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (அக். 31) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

இரண்டு நாட்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

கன்னியாகுமரியில் 7.6 மி.மீ. மழை

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் அதிகபட்சமாக 7.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது தோராயமாக 1 செ.மீ. ஆகும்.

இதனிடையே, தமிழகத்தில் அக். 1 முதல் அக். 30 வரை சராசரியாக 217.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தின் இயல்பான மழை அளவு 165.6 மி.மீ. ஆகும். இதன்படி, இயல்பைவிட 32% கூடுதலாக மழை பெய்துள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிக்கை முழுமையாக

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel