மாணவர்களின் மேற்படிப்புக்காக வங்கிக் கடன் முகாம்!

Published On:

| By Kavi

கல்லூரி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்காக வருகிற 23ஆம் தேதி மாபெரும் வங்கி கடன் முகாம் திருவள்ளூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்புக்கான வங்கிக் கடன் வழங்குவதற்கான சிறப்புக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களில் இருந்து கல்லூரி பிரதிநிதிகள், அனைத்து வங்கி மேலாளர்கள், அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார அளவிலான கற்போர் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான மேற்படிப்புக்கான வங்கிக் கடன் எளிமையாக வழங்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டு மாணவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட அளவிலும் மற்றும் வட்டார அளவிலும் உதவி சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 23ஆம் தேதி மாபெரும் வங்கிக் கடன் முகாம் திருவள்ளூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது. அந்தச் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ராஜ்

விழுப்புரம்: மீன்பிடி துறைமுக பணிகளை நிறுத்தியதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

ADVERTISEMENT

தொடரும் தேயிலை விவசாயிகளின் போராட்டம்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share