சங்கராச்சாரியாருக்கு மோடி வாழ்த்து

Published On:

| By Balaji

காஞ்சி சங்கராச்சாரியார் என்று அழைக்கப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு இன்று 80வது பிறந்தநாள். இதனால், ஆயிரம் பிறை கண்டவர் என்ற பெருமையை அடைகிறார். இதையொட்டி, பிரதமர் மோடி சங்கராச்சாரியாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், சங்கராச்சாரியார் ஆன்மீகச் சேவைக்கு தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் ஆயிரமாவது பிறை காணும் தினமான இன்று, என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை சென்னை காமராஜர் அரங்கில் சங்கராச்சாரியாருக்கு பிறந்தநாள் விழா நடக்கிறது. இதில் பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா கலந்து கொள்ள சென்னை வந்தார்.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share