உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது எதிர்த்து ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், ‘நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இந்தியா முழுவதும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த விரும்புகின்றன. சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்றன’, என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு ஆம் ஆத்மி தலைவர் அசுதோஷ், ‘இது ஜனநாயகப் படுகொலை. அரசு பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறதா? இல்லையா? என்பதை சபையில்தான் நிரூபிக்கப்பட வேண்டும். மோடி அரசு எதிர்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற நோக்கில் சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது.’, என்று தெரிவித்துள்ளார்.
