அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் பட அப்டேட்!

Published On:

| By Kavi

ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில், ‘ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம ராஜ் இயக்கத்தில், அருள்நிதி– துஷாரா விஜயன் நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதைகள் மூலம் பார்வையளர்களுக்கு நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்ற ஒத்த சிந்தனை உள்ளவர்கள் ஒன்று சேரும் போது அதன் முடிவு நிச்சயம் ஈர்க்கக் கூடிய ஒன்றாக இருக்கும்.

ADVERTISEMENT

அந்த வகையில் நடிகர் அருள்நிதி தன்னுடைய கதைத் தேர்வு மற்றும் நடிப்பால் சினிமா ஆர்வலர்களையும் ரசிகர்களையும் ஈர்க்கத் தவறவில்லை.

சமீபத்தில் வெளியான அவருடைய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸிலும் வெற்றி பெற்றதை அடுத்து இந்த வருடம் எதிர்ப்பார்ப்பில் இருக்கக் கூடிய பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

ADVERTISEMENT

அந்த வகையில், கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில் வெற்றிபெற்ற ‘டாடா’ படத்தைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில், ‘ராட்சசி’ படப் புகழ் சை.கெளதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘கழுவேத்தி மூர்க்கன்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

Arulnidhis Kazhuvethi Moorkkan movie update

‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ADVERTISEMENT

மேலும், சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த், சரத் லோகிதாஸ்வா, ராஜசிம்மன், ‘யார்’ கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர்  வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதுடன் படம் குறித்தான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, ராமேஸ்வரம், விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

இராமானுஜம்

ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!

மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 436 பேர் தற்கொலை: காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share