வாரிசு நடிகர்கள் எளிதில் திரைத்துறைக்குள் வந்துவிடலாம். நடிகராக தன்னைத் தக்கவைத்துக் கொள்ள ரசிகர்கள் ரசிக்கும் நடிகராக இருக்க வேண்டும். பொதுவாக, வாரிசு நடிகர்கள் கமர்ஷியல் பக்கம் சென்று எளிதில் மக்கள் மத்தியில் இடம்பிடித்துவிடுவார்கள். ஆனால், அருள்நிதி அப்படியானவர் அல்ல. புதுமையான கதைத்தேர்வும், வித்தியாசமான நடிப்புமாக ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.
வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மெளனகுரு, டிமாண்டிகாலணி, ஆறாது சினம், பிருந்தாவனம், கே 13, இரவுக்கு ஆயிரம் கண்கள் மாதிரியான கவனிக்கத்தக்க படங்களைக் கொடுத்திருக்கிறார்.
இறுதியாக, அருள்நிதி நடிப்பில் வெளியான படம் ‘களத்தில் சந்திப்போம்’. நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்திருப்பார். அடுத்ததாக, இரண்டு படங்களை பெரிதும் நம்பியிருக்கிறாராம் அருள்நிதி. சொல்லப் போனால், இரண்டு இயக்குநர்களைப் பெரிதும் நம்பியிருக்கிறார்.
அருள்நிதிக்கு அரவிந்த் இயக்கத்தில் தேஜாவு படங்களும், இன்னாசிப்பாண்டி இயக்கத்தில் டைரி படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு இயக்குநருமே புதுமுகங்கள். இதில், டைரி பட இயக்குநர் இன்னாசிப் பாண்டி யாரென்றால் ஈரம் இயக்கிய அறிவழகன், அஜய் ஞானமுத்து படங்களில் பணியாற்றியவர்.
அஜய் ஞானமுத்துவின் டிமாண்டிகாலனி படத்தின் போது அருள்நிதியோடு அறிமுகியிருக்கார் இன்னாசி. இப்போது, டைரி படத்தில் என்ன ஸ்பெஷல் என்றால், குறைந்தது 1000 ஷாட்களில் கிராபிக்ஸ் இருக்காம். வெரைட்டியான ஒரு கதையென்றும் சொல்கிறார்கள்.
தேஜாவு & டைரி என இரண்டு படங்களுமே இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறது. விரைவிலேயே ரிலீஸை எதிர்பார்க்கலாம். இவ்விரு படங்களைத் தொடர்ந்து, சீனுராமசாமி இயக்கத்திலும், எருமைசாணி யூடியூப் புகழ் விஜய் படமும் லைன் அப்பில் இருக்கிறது.
**- ஆதினி**
�,