வேரூன்ற முடியாத RSS-BJP.. புதிய அரசியல் முகமூடி- அண்ணாமலையை சாடிய மாணிக்கம் தாகூர்

Published On:

| By Pandeeswari Gurusamy

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி இன்று (ஜூன் 5) “நம்ம இயக்கம் – வீ த லீடர்ஸ்” (We The Leaders) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சுமார் 7 லட்சம் பேர் ஆன்லைன் வழியாக இதில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், அண்ணாமலையின் புதிய இயக்கம் என்பது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா?

அமித் ஷாவின் அனுமதியுடன், மோடியின் ஆசீர்வாதத்துடன், BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி.

ADVERTISEMENT

பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம்; ஆனால் கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் ஆகியவை அதே பழையதுதானா?

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “Plan B” ஆக இது உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாடு கடந்த காலத்திலும் அரசியல் வேடமாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது. இனியும் பெயர் மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தையே மக்கள் மதிப்பிடுவார்கள்.

முகமூடி மாறலாம்; ஆனால் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம்.

Plan B is ready for Tamilnadu.
RSS behind it .
Beware of them.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share