பாமக சார்பில் 2025 – 2026-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 1) சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Anbumani released agricultural budget
வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்…
1. 2025-26ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினெட்டாம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.85,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.65,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.
2. வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
3. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.22,500 கோடி செலவிடப்படும்.
4. பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.
5. தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25% வேளாண்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு. அதன்படி, பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் கோடி என்றால், அதில் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6. வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்திற்காக ரூ.85,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
7. பயிர்க் கடன்சுமை, கொள்முதல் விலை உள்ளிட்ட உழவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை களைவதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும். அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க சட்டம்
8. தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டு உழவர்களின் லாபத்தையும் வாழ்வாதாரத்தையும் பெருக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.
9. அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் 2025 நிறைவேற்றப்படும்.
10. அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, வேளாண் வணிகம், சந்தைப்படுத்துதல் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Anbumani released agricultural budget