தியாகராய நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் வெற்றி

Published On:

| By Pandeeswari Gurusamy

Bussy Ananad Vijay

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் 18 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சென்னை தியாகராய நகர் தொகுதியில் திமுக சார்பில் ராஜா அன்பழகன், அதிமுக சார்பில் பி.சத்தியநாராயணன் என்ற சத்யா, தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் களம் கண்டனர்.

இந்நிலையில் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் அதிமுக வேட்பாளர் சத்யாவை 13,027 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

திமுக வேட்பாளர் ராஜா அன்பழகம் 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share