இளையராஜாவின் சிம்பனி இசையில் ஓர் ஆங்கிலப்படம்!

Published On:

| By Minnambalam Desk

நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் (லண்டன், யுகே) நிறுவனம் தயாரித்து அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள ஆங்கில அமானுஷ்ய காதல் படம் ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’.

லண்டனைச் சேர்ந்த தக்ஷ் நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் . போலந்து நாட்டின் வார்சா வைச் சேர்ந்த மாடில்டா பாஜர் நாயகியாக நடிக்கிறார். தமிழ்ப்படமான ‘அகத்தியா’வில், அர்ஜுன் மற்றும் ஜீவாவுடன் இணைந்து ‘இவர் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

தங்கள் காதலை சண்டை இல்லாமல் முறித்துக் கொள்ள தனிமையான எஸ்டேட்டுக்கு செல்லும் ஒரு ஜோடி அங்கு நடைபெறும் சம்பவங்களால் எத்தகைய மாற்றங்களை சந்திக்கிறார்கள் என்பதே ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’. இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்கிறார்கள்.

“பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக இணைக்கும் கதையை யதார்த்தமாக வழங்கி இருக்கிறோம். இப்படம் காதலின் சக்தியை ரசிகர்களுக்கு எடுத்துரைக்கும்,” என்கிறது படக்குழு.

ADVERTISEMENT

திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்திற்கு இசையமைப்பவர் இளையராஜா, தனது சிம்பொனி இசையையம் இளையராஜா வழங்கியுள்ளார். ராஜாவின் இசை மாஸ்கோ போ டை ஆர்கெஸ்ட்ராவுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதோடு படத்திற்காக இளையராஜாவின் இசைப்பதிவு செய்யும் விதத்தையும் படம் பிடித்துள்ள படக்குழுவினர், ராஜாவின் இசை உருவாகும் செயல்முறையைப் பற்றிய ஒரு சிறப்பு காணொலியையம் வெளியிடவிருக்கின்றனர்.

இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

— ராஜ திருமகன்

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share