தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் நாளை ஜூலை 2-ந் தேதி இணைகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக அக்கட்சியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதுவரை மொத்தம் 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் ஏற்கனவே 4 பேர் தவெகவில் இணைந்துவிட்டனர்.
தற்போது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நாளை தவெகவில் இணைகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள்:
மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தவெகவில் இணையும் அதிமுக ‘மாஜி’க்கள்:
முன்னாள் அமைச்சர்கள்:
விராலிமலை சி.விஜயபாஸ்கர்
கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
திருச்சி வளர்மதி
திருப்பூர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்
பி.கே.வைரமுத்து (முன்னாள் எம்.எல்.ஏ, புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் மாஜி மா.செ.)
இளம்பை தமிழ்ச்செல்வன் (முன்னாள் எம்.எல்.ஏ, பெரம்பலூர் மாவட்டம் மாஜி மா.,செ.)
ஒரத்தநாடு சேகர் (ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர்)
திருச்சி சீனிவாசன் (திருச்சி முன்னாள் துணை மேயர், திருச்சி மாநகர மாஜி மா.செ)
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
மன்ராஜ் (ஸ்ரீவில்லிப்புத்தூர்)
ராஜவர்மன் (சாத்தூர்)
சதன் பிரபாகர் (பரமக்குடி)
திருஞானசம்பந்தம் (பேராவூரணி)
சுந்தரராஜன்
இவர்களுடன் கரூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும் தவெகவில் நாளை இணைகின்றனர்.
சி.விஜயபாஸ்கர் ட்வீட்
தவெகவில் இணைவது குறித்து முன்னாள் அமைச்சர் விராலிமலை சி.விஜயபாஸ்கர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஜெயலலிதா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய என் பொதுவாழ்வுப் பயணம்… 35 ஆண்டுகளாக, நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும், அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு… ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், #நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன். இன்று… ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக, மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக, தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று, வளமான தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்குப் புதிய திசையை உருவாக்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
முதல்வர் விஜய் தலைமையை ஏற்று, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும், நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன். நேற்று போலவே… இன்று இன்னும் உறுதியாக… நாளை இன்னும் வலிமையாக… மண்ணுக்கான..மக்களுக்கான என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! இவ்வாறு சி.விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ளார்.
