VIDEO: புகழாரம்.. கோரிக்கை.. வாக்குறுதி.. விஜய்யின் கூட்டணி கட்சிகள் கூட்டம்- நடந்தது என்ன?

Published On:

| By Mathi

What Transpired at Vijay's TVK Alliance Consultation Meeting?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரான முதல்வர் விஜய் தலைமையில் இன்று அக்கட்சியின் தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவளத்தில் இன்று ஜூலை 1-ந் தேதி நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களான மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, பேராசிரியர் காதர் மொகிதீன் மற்றும் அவர்களது கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இதில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து இக்கூட்டத்தில் பங்கேற்றோர் ஊடகங்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்: எந்த மாதிரியான வேல்யூஸ்ல நிக்கணும் அப்படின்றது தான் நடந்தது. அதாவது பேசிக் வேல்யூஸ்னு சொல்லுவோம், நான்-நெகோஷியபிள்ஸ் பத்தி தான் பேசணும். ஏன்னா இது முதல் கூட்டணி மீட்டிங். எல்லாருமே எல்லா கட்சிகளும் அவங்கள பத்தி பேசுனாங்க. முக்கியமா மதச்சார்பின்மை, சமூக நீதி, அனைவருக்குமான அரசாங்கம், லஞ்சம் இல்லாத அரசாங்கம் இத பத்தி தான் பேச்சு வந்தது. முதல்வர் வந்து கடைசியா முடிக்கும் பொழுது, இந்த கூட்டணி வலிமையாக இருக்கிறது, 5 வருஷம் மட்டும் இல்ல வரப்போற எல்லா வருடங்களும் இந்த கூட்டணி வலிமையாக இருக்கும் அப்படின்னு சொன்னாரு.. நாங்க உங்க கூட வலிமையா நிற்போம் அப்படின்ற அசுரன்ஸ்ஸை எல்லா தலைவர்களும் கொடுத்தாங்க. இடதுசாரிகள் வராதது பற்றி எதுவும் பேசவில்லை.

ADVERTISEMENT

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அபுபக்கர்: ஒரு மணி நேரம் 15 நிமிடம் நேரம் கூட்டம் நடந்தது.. 2 கட்டமாக ஆலோசனை கூட்டம் நடந்தது. முதலில் அறிமுகம் நடைபெற்றது. அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திட்டு தலைவர்களுடன் மட்டும் தனியே ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி சொல்லப்பட்டது. எங்கள் கட்சியின் சார்பாக எங்க தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் பேசும் பொழுது, ”இந்த கூட்டணிக்கு ஒரு பெயரை வைக்க வேண்டும், கூட்டணியினுடைய செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை மாநில அளவிலே நியமிப்பதோட எல்லா மாவட்டங்களிலும் நியமிக்க வேண்டும்” என்று சொன்னோம். அதேபோன்று உள்ளாட்சித் தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைமையிலான கூட்டணி அதிகப்படியான இடங்களிலே வெற்றி பெறுவதற்கு அனைத்து பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று சொன்னோம், அதையும் பரிசீலித்தார்கள். இறுதியாக பேசிய முதலமைச்சர் அவர்கள் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும், சமூக நீதி பாதுகாக்கப்படும், தமிழ்நாட்டினுடைய முன்னேற்றத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், அதேபோன்று என்னென்ன வகையிலே இதை முன்னேறிய மாநிலமாக ஆக்க முடியுமோ அதை செய்வோம், ஊழலற்ற சிறந்த ஒரு நல்லாட்சியை தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைமையிலான இந்த ஆட்சி வழங்கும் என உறுதி அளித்தார்.

ADVERTISEMENT

அமைச்சர் நிர்மல்குமார்: தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்த ஒரு கூட்டணி. ஒரு நேச்சுரல் அலையன்ஸ். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்கள் சேவைக்கு மட்டுமே, மக்கள் நலனுக்கு மட்டுமே, மக்களுக்காக சேவை பண்றதுக்கு மட்டுமே இப்படி ஒரு கூட்டணி இதுவரை தமிழ்நாட்டுல ஃபார்ம் ஆனது இல்ல. ஏதாவது ஒரு கிவ் அண்ட் டேக் இருக்கும், பட் இப்போ இருக்குற கூட்டணில தான் எந்த எந்த மாதிரி எதுவும் இல்லாமல் மக்களுக்காக சேவை பண்றதுக்கு மட்டுமே, மக்களுக்கான பணி செய்றதுக்கு மட்டுமே ஒரு நேச்சுரலான அலையன்ஸ். மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு அலையன்ஸ் கண்டிப்பா இந்த அலையன்ஸ் வந்து மிகச் சிறப்பாக மக்களுக்கான செயல்பாடுகளை செய்யும்… லஞ்சம் ஊழலற்ற அரசின் செயல்பாடுகளை பாராட்டினார்கள்..

கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரைக்கும் அவர்களுக்கும் பார்மாலிட்டீஸ் இருக்கும். அவங்களுடைய பொலிட்பீரோ எல்லாத்துலயும் ஆலோசிச்சுட்டு அவங்க கண்டிப்பா சொல்லுவார்கள். அவர்கள் வர வேண்டும் என்பது எங்க அனைவருடைய விருப்பம்… அடுத்த கூட்டம் விரைவாக நடக்கும்.

பாஜக, திமுக, அதிமுக தவிர எங்களுடன் ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகள் வரலாம்.

விசிக சிந்தனை செல்வன்: ”எந்தெந்த புள்ளிகள்ல உடன்படுகிறோம், நாட்டினுடைய நலன் குறித்த புள்ளிகள்ல எந்தெந்த புள்ளிகள்ல நாம உடன்பட்டு செயல்பட முடியும், எந்தெந்த புள்ளிகள்ல நமக்கு டிஃபரன்சஸ் இருக்கு அப்படிங்கிறத குறித்த ஒரு விரிவான உரையாடல் நடத்திட்டு, உடன்படுகிற புள்ளிகள்ல இணைந்து நின்று ஒரு தொடர் பயணத்தை மேற்கொள்வதற்கான சாத்தியபாடுகள் பற்றி பேசினோம்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ: இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழலை அகற்ற முடியாமல் இருந்த சூழலில், தற்போது தவெக அரசு ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், இது தவெக மற்றும் விஜய் மீதான ஆதரவை அதிகரித்துள்ளதாகவும் கூட்டத்தில் பேசப்பட்டது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share