மீண்டும் சரிதா: எந்த படத்தில் தெரியுமா?

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த சரிதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் 80களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக, அதிக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை சரிதா. தன் தனி உடல் மொழியால், முக பாவனைகளால், நடிப்பால் தனி முத்திரை பதித்த சரிதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் வெற்றிப் படங்களை குவித்தவர்.

தப்புத்தாளங்கள், நூல்வேலி’, ‘மெளன கீதங்கள், பொண்ணு ஊருக்கு புதுசு, ஊமை விழிகள் எல்லாம் ஒரு நடிப்புக்கான ட்ரேட்மார்க் எனலாம். எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ‘சரிதா போல வருமா’ என சொல்லும் அளவிற்கு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியவர் சரிதா. இவரின் நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஒருகட்டத்தில், நடிப்பதைக் குறைத்துக் கொண்ட சரிதா தொடர்ந்து பல மொழிகளிலும் டப்பிங் செய்து வந்தார்.

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை சரிதா.

இதற்கான அறிவிப்பை மாவீரன் படக்குழு நேற்று ( ஆகஸ்ட் 03) வெளியிட்டது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு  தெலுங்கில் ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

  • க. சீனிவாசன்

அப்பா பேரைக் காப்பாத்துவேன்: ஷங்கர் மகள் ஷார்ப் 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.