மும்பை நடிகைகளுக்குத்தான் முக்கியத்துவம்: நடிகை ஜெயசுதா விமர்சனம்!

சினிமா

மும்பை நடிகைகளுக்குத்தான் சினிமாவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாக நடிகை ஜெயசுதா தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் தயாராகி வரும் வாரிசு படத்தில் ஜெயசுதா நடித்து வருகிறார் .தமிழில் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் நான் அவனில்லை , அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும்,அலை பாயுதே, தவசி, செக்கச் சிவந்த வானம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ஜெயசுதா. இவர் திரைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.

நடிகைகளைத்தான் குறை சொல்வார்கள்

இதையொட்டி, தொலைகாட்சியினர் இவரிடம் பேட்டி எடுத்து வருகின்றனர். ஏபிஎன் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் தனக்கு இன்னமும் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்படாதது குறித்துப் பேசியுள்ளார். “இந்த 50 ஆண்டு கால எனது நீண்ட, நெடிய பயணத்தில், ஹீரோக்கள் கொண்டாடப்படுவதையும், நடிகைகள் குறைத்து மதிப்பிடப்படுவதையும் பார்க்கிறேன். ஒரு முன்னணி ஹீரோ சரியாக நடனம் ஆடாவிட்டால்கூட, ஹீரோயினைதான் இயக்குநர் குறை சொல்வார்.

கங்கனாவை விமர்சித்த ஜெயசுதா

மும்பையிலிருந்து வரும் நடிகைகளுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அவர்களது நாய்குட்டிக்குகூட அறை ஒதுக்குகின்றனர். இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் உங்களுக்கு ஏன் பத்மஸ்ரீ விருது கொடுக்கவில்லை?’’ என்று பலரும் என்னிடம் கேட்கின்றனர். இதற்கு என்னிடம் பதில் இல்லை. ஒரு வேளை அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொடுத்திருக்கலாம்.

பத்மஸ்ரீ விருதுக்கு இந்தி நடிகைகள் மட்டுமே தகுதியானவர்களா..? மற்ற மொழி நடிகைகளுக்குத் தகுதி இல்லையா…?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ஜெயசுதா.

இராமானுஜம்

சமந்தாவின் பதில் : நயன்தாராவை அவமானப்படுத்தினாரா கரண் ஜோகர்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *