அப்பா பேரைக் காப்பாத்துவேன்: ஷங்கர் மகள் ஷார்ப் 

Published On:

| By Aara

அப்பாவின் துறைக்குள் நானும் வந்திருப்பது பெருமிதமாக இருக்கிறது என்று இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட அடையாளமான இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி  தமிழில் உருவாகி வரும் ‘விருமன்’  படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.  படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் நேற்று (ஆகஸ்டு 3) வெளியிட்டனர்.   எம்.முத்தையா இயக்கிய இந்தப் படத்தில்  நடிகர் கார்த்தியின்  நாயகியாகிறார் அதிதி. 
தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தைப் பற்றி குறிப்பிடும் அதிதி,  “எனது தந்தை பணியாற்றும் அதே துறையில் நுழைவதை நான் பெருமையாக உணர்கிறேன். என்னால் முடிந்த சிறந்த பணியை இப்படத்துக்காகக் கொடுத்துள்ளேன்.  அப்பா பேரைக் காப்பாத்துவேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அதிதி, “தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் நடிப்பேன். மொழி எனக்கு ஒரு தடையில்லை. நல்ல ஸ்கிரிப்ட் ரெடியாக இருந்தால் நான் ரெடி” என்று கூறியிருக்கிறார். 

‘விருமன்’ தவிர, நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மாவீரன்’ படத்திலும் அதிதி நடிக்கிறார் நடிகர் சூர்யாவால் தயாரிக்கப்பட்ட விருமன் படம்  ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

-வேந்தன்

இன்று வெளியாகிறது விருமன் படத்தின் ஆடியோ, ட்ரெய்லர்