தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டாடியர் காம்ரேட், கீதா கோவிந்தம் ஆகிய படங்களின் மூலம் விஜய் தேவரகொண்டாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லைகர்’. படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக நேற்று (ஆகஸ்ட் 25) வெளியானது.
இந்த படத்தை ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 சார்பாக தமிழ்நாட்டில் வெளியிட்டுள்ளார்.
படம் வெளியானதை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் லைகர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அவருக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, அன்புள்ள யுவன், நாம் விரைவில் இணைந்து பணியாற்றலாம். வாழ்த்துக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் யுவன் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிகர் படத்திற்காக சுமார் 35 கோடி ரூபாய் விஜய் தேவரகொண்டார் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தான் அவரது கேரியரில் அதிக சம்பளம் எனவும் சொல்லப்படுகிறது.
- க.சீனிவாசன்