”முதல்வர் விஜய்யை கேள்வி கேட்டுவிட்டால் கரண்ட் வந்துவிடுமா? கரண்ட் இல்லைன்னாலும் 6 மாதம் கேள்வி கேட்காதீங்க” என்று மின்வெட்டு குறித்து நடிகர் மகேந்திரன் (Actor Mahendran) பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

“நாட்டாமை” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். அண்மையில் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு முன்பு வரை அரசியல் பக்கம் எட்டிப்பார்க்காதவராக இருந்தார் மகேந்திரன். தமது வீட்டில் அமர்ந்தபடி, “நமக்கு பிரச்சனை வந்தா நாமதான் இறங்கி என்னான்னு கேள்வி கேட்கனும்.. இதை எல்லாரும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.. இதையே எல்லாரும் செய்யுங்க” என சட்டசபை தேர்தலுக்கு முன்னர் ஒரு வீடியோவை மகேந்திரன் வெளியிட்டிருந்தது பேசுபொருளானது.

மே 4-ந் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல்வர் விஜய்யின் தீவிர ஆதரவாளராக வெளிப்படுத்திக் கொண்டார் மாஸ்டர் மகேந்திரன். அதேபோல 2022-ம் ஆண்டு தமது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விஜய் கலந்து கொண்ட போட்டோவையும் மே 4-ந் தேதிக்கு பிறகு பகிர்ந்து கொண்டார் மகேந்திரன்.
தற்போதைய தவெக ஆட்சி தொடர்பான தகவல்களை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வரும் மாஸ்டர் மகேந்திரன், கிளவுட் மீடியா ஊடகத்துக்கு அளித்த பேட்டி பல்வேறு விமர்சனங்களுடன் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மின்வெட்டு குறித்து நடிகர் மகேந்திரன் (Actor Mahendran) கூறியது என்ன?
அதில்,
“கரண்ட் போகுதா?”
“சோலார் சிஸ்டம்னு ஒன்னு கண்டுபிடிச்சானுக.. ஏதாவது டிரை பண்ணினீங்களா?”
”சரி ஓகே.. இவ்வளவு நாள் கரெண்ட் இஸ்யூ இல்லாம இருந்துட்டீங்க.. ஜாலியா.. இப்ப இஸ்யூ ஆகுதா.. சரி பரவா இல்லை.. ஒரு 6 மாசம் கேட்காதீங்க….ஏன் வீட்டுல கூட கரெண்ட் எடுத்துக்குங்க… வெயிலில் இருந்து ரெண்டு வயரை வெச்சு 2 மோட்டாரை வெச்சு எப்படி ஃபேன் சுத்த வைக்கனும்னு எனக்கு தெரியும்.. நான் பண்ணியிருக்கேன் ஜாலியா.. நான் பேசுறது Funny தெரியும்.. பட் நான் பிராக்டிக்கல்லா பேசுறேன்..”
“இப்ப நீங்க அவரை (விஜய்யை) கேள்வி கேட்டுட்டா மட்டும் கரெண்ட் வந்துடவா போகுது? அவர் மைக் முன்னாடி வெச்சுட்டு, “ஏன் இப்படி நடந்துச்சு?”ன்னு கேள்வி கேட்டா ”கரெண்ட் ஆன் ஆகிடுமா உங்க வீட்டுல?” ஆகாது இல்லை..”
”ஏன் கேட்குறீங்க.. ஏன் ஒருத்தரை கேள்வி கேட்கிறதே மோட்டிவ்வா இருக்கிறீங்க? இன்னும் எத்தனை வருஷம் கேள்வி கேட்பீங்க.. உங்களுக்கு பதில்தான் வேணும் இல்லையா? நீங்க கேள்வி கேட்கிறதை நிறுத்துனதான் பதிலே வரும்.. நீங்க கேள்வி மட்டும் கேட்டுகிட்டே இருந்தா பதில் எப்படி வரும்?”… இவ்வாறு அந்த பேட்டியில் நடிகர் மகேந்திரன் பேசியுள்ளார்.
நடிகர் மகேந்திரனின் இந்த பேட்டியை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
