ஜெயலலிதா-பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

முதல்வர் ஜெயலலிதாவை, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று சந்தித்தார். முதல்வரின் போயஸ்தோட்ட இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பின்னர் பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன், காவிரிக்கு குறுக்காக கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்ட முயற்சித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டுத் தீர்வு காணவேண்டும். கர்நாடக அரசு அணை கட்டுவதைக் கண்டித்து வருகிற 12ம் தேதி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளோம். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel