அதிமுக வேட்பாளர்கள் அதிரடி மாற்றம்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

227 தொகுதிகளுக்கும் அதிமுக முந்திக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்தது.ஆனால் அறிவித்த அதே வேகத்தோடு பல தொகுதிகளிலும் வேட்பாளர்களை மாற்றி வருகிறது அதிமுக தலைமை. நேற்று மாலை அருப்புக் கோட்டை தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரை புதிதாக வைகைச் செல்வன் அறிவிக்கப்பட்டார்.இன்றும் 10 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள புதிய வேட்பாளர்கள் பட்டியல் இதோ,

மேட்டூர் – செ.செம்மலை

ADVERTISEMENT

காட்டுமன்னார் கோவில் – முருகுமாறம்

தியாகராய நகர் – பி.சத்தியநாராயணன்

ADVERTISEMENT

வேதாரண்யம் – ஓ.எஸ்.மணியன்

பூம்புகார் – எஸ்.பவுன்ராஜ்

ADVERTISEMENT

திருபுவனை – சங்கர்

மன்னார்குடி – எஸ்.காமராஜ்

நாகர்கோவில் – ஏ.நாஞ்சில் முருகன்

புதுச்சேரி:

திருநள்ளாறு – முருகையன்

காரைக்கால் – அசனா

இதில் ஓ.பி.எஸ் மணியன் நாகை மாவட்ட புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகையில் மாவட்டச் செயலாளராக இருந்த ஜெயபால் பதவி பறிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள தொகுதிகளிலும் தாங்கள் எப்போது மாற்றப்படுவோம் என்று தெரியாமல் பதட்டத்தோடு காத்திருக்கிறார்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel