ஏற்கனவே ஒருமுறை தனித்து போட்டியிட்ட பாமக, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து களம் காண்கிறது. டாக்டர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது பாமக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள 45 பேரில் 20 பேர் வன்னியச் சமுதாயத்தைச் சேராதவர்கள். 2-வது பட்டியல், இந்த வார கடைசியில் வெளியாகும் என தெரிகிறது. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி சோழிங்கர், தர்மபுரி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அன்புமணி குறி வைத்துள்ள 3 தொகுதிகள்
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








