75 நவீன வேன்களில் அதிமுக பிரச்சாரம்!

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிற மே-16ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதற்கிடையே ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பு செய்யும் நோக்கத்தில் 75 அதிநவீன வீடியோ வேன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வேனின் இடதுபுறத்தில், அகன்ற டிஜிட்டல் திரை வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் வகையில், செயற்கைக்கோள் வசதியுடன் டிஜிட்டல் திரை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 75 மாவட்டங்களில் இந்த நேரடிப் பிரச்சாரம் ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel