பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 28) கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, ரூ.28,602 கோடி முதலீட்டில் 12 தொழில் நகரங்கள் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்தியாவில் 100 தொழில் நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (National Industrial Corridor Development Programme) கீழ் 12 தொழில் நகரங்கள் அமைப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தைப் பற்றி செய்தியாளர்களிடம் தகவல் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், ரூ 28,602 கோடி முதலீட்டில் 10 மாநிலங்களில் உள்ள 6 தொழில் வழித்தடங்களில் அமைக்கப்படவுள்ள 12 தொழில் நகரங்கள் ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் திறன் கொண்டது.
குர்பியா(உத்தராகண்ட்), ராஜ்புரா-பட்டியாலா(பஞ்சாப்), டிகி(மகாராஷ்டிரா), பாலக்காடு(கேரளா), ஆக்ரா(உத்தரப் பிரதேசம்) பிரயாக்ராஜ்(உத்தரப் பிரதேசம்), கயா(பீகார்), சஹீராபாத்(தெலங்கானா), ஒர்வகல் மற்றும் கொபர்த்தி(ஆந்திர பிரதேசம்) மற்றும் ஜோத்பூர்-பாலி(ராஜஸ்தான்) ஆகிய 11 இடங்களில் இந்த தொழில் நகரங்கள் உருவாகவிருக்கின்றன.
12-வது நகரம் ஜம்மு காஷ்மீர் அல்லது ஹரியானாவில் அமையலாம். தற்போது இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் 12 –வது நகரத்தை அறிவிக்க முடியவில்லை.
இந்த தொழில் நகரங்கள் மூலம் 10 லட்சம் நேரடி வேலை வாய்ப்பும், 30 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியா 2030-இல் அடைய நினைக்கும் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கிற்கு இந்த தொழில் நகரங்கள் உதவும்.
ஸ்மார்ட் நகரங்களாக உருவாகவிருக்கும் இந்த நகரங்களில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும்” என்றார்.
இந்த பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெறவில்லை என்றாலும், இதே கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தனியார் பண்பலை வானொலி சேவைகள் விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 11 நகரங்களில் 33 தனியார் பண்பலை வானொலி அலை வரிசை ஏலம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
70,403 பொறியியல் இடங்கள் காலி : துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
SHARE MARKET : சரிவில் தொடங்கிய பங்குச்சந்தை… லாபம் ஈட்டும் என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ்!
Comments are closed.