70,403 பொறியியல் இடங்கள் காலி : துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Published On:

| By Kavi

70,403 பொறியியல் படிப்புக்கான இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் துணை கலந்தாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் என 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் 12ஆம் வகுப்பு முடித்த 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக மாற்றுத்திறனாளி உட்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 27 வரை நடந்தது. இதில் 836 இடங்கள் நிரம்பின.

ஜூலை 28 முதல் தொடங்கி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மூன்றாவது சுற்று கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது.

முதல் 2 சுற்றுகள் முடிவில் 64,020 பொறியியல் படிப்புக்கான இடங்கள் நிரம்பின. மூன்றாவது சுற்றில் பங்கேற்க 1,14,149 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு 82,693 மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். மொத்தமாக 1,23,031 பொறியியல் இடங்கள் நிரம்பின. கடந்த ஆண்டு 1,16,620 இடங்களே நிரம்பிய நிலையில் இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது.

எனினும் இன்னும் 70,403 இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த நிலையில் பி.இ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதற்கான முதல் தேதி 28.8.2024. கடைசித் தேதி – 4.9.2024. 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் வாய்ப்பு வழங்கும் வகை இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

தகுதியுள்ள மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.dte.tn.gov.in ஆகிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்துக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.

கட்டண விவரம்: பொதுப் பிரிவு, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, பிரிவு மாணவர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.500 எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு ரூ.250 ஆகும்.

இந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பா் 10, 11-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை கலந்தாய்வு குறித்த கூடுதல் விவரங்களைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800- 425-0110  மற்றும் மின்னஞ்சல் treacare@gmail.com.

-பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

SHARE MARKET : சரிவில் தொடங்கிய பங்குச்சந்தை… லாபம் ஈட்டும் என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ்!

தங்கம் விலை : இன்றைய நிலவரம்!

தங்கலான் படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்

மருத்துவர்களின் பாதுகாப்பு : அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதாரத் துறை முக்கிய கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel