இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்: ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (ஜூன் 26) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 640 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்:

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 640 அதிகரித்து ரூ.1,05,760-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.94 உயர்ந்து குறைந்து ரூ.11,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.752 உயர்ந்து ரூ.88,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,35,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
25-6-20261,05,120
24-6-20261,06,800
23-6-20261,08,480
22-6-20261,08,800
21-6-20261,08,800
20-6-20261,08,800
19-6-20261,08,560
18-6-20261,11,600
17-6-20261,12,240
16-6-20261,12,480

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

25-6-2026230
24-6-2026240
23-6-2026250
22-6-2026255
21-6-2026255
20-6-2026255
19-6-2026255
18-6-2026270
17-6-2026275
16-6-2026275
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share