தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகள் (Venezuela Earthquake) உலக நாடுகளை பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில், கரீபியன் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ளது வெனிசுலா. இந்நாட்டின் தலைநகரம் கராகஸ் (Caracas). கொலம்பியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகள் வெனிசுலாவின் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

வெனிசுலாவில் என்ன நடந்தது? (Venezuela Earthquake)
வெனிசுலாவின் யாராகுய் (Yaracuy) மாகாணத்தை மையமாகக் கொண்டு, ஜூன் 24-ந் தேதி மாலை 6:04 மணிக்கு இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 39 விநாடிகள் இடைவெளியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவாகின. இந்த ‘இரட்டை நிலநடுக்கம்’ (Earthquake Doublet) நிலப்பரப்பிலிருந்து 10 முதல் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதால், அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது.
இந்நிலநடுக்கத்தின் மையப்புள்ளி யாராகுய் மாகாணத்தின் மோரான் (Morón) நகராட்சிக்கு அருகே அமைந்திருந்தது. இது தலைநகர் கராகஸிலிருந்து சுமார் 168 கி.மீ மேற்கே உள்ளது.
இத்தகைய இரட்டை நிலநடுக்கம் மிகவும் அரிதான, ஆபத்தான புவியியல் நிகழ்வு என்கின்றனர் வல்லுநர்கள்.
பாதிப்புகள் என்ன?
வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின்படி,
- தற்போது வரை 164 பேர் உயிரிழந்துள்ளனர்
- 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
- இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன.
- 30,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.
- மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
பயங்கர சேதங்கள்
- தலைநகர் கராகஸின் லாஸ் பாலோஸ் கிராண்டேஸ் மற்றும் அல்டமிரா போன்ற பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன.
- தலைநகர் கராகஸ் மட்டுமல்லாது லா கைரா (La Guaira), அரகுவா (Aragua) மற்றும் கரபோபோ (Carabobo) மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
- வெனிசுலாவின் அதிமுக்கிய விமான நிலையமான சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையம் (Simón Bolívar International Airport) கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
- சைமன் பொலிவார் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாடுகளின் உதவிக்கரம்
- வெனிசுலாவில் நிகழ்ந்த பெருந் துயரத்திற்கு அமெரிக்கா, சீனா, பிரேசில் மற்றும் பல நாடுகள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளன.
- சர்வதேச நிதியம் (IMF), வெனிசுலா அரசுடன் இணைந்து பாதிப்புகளை மதிப்பீடு செய்து வருகிறது.
- போப்பாண்டவர், அவசர நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
- ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம், இந்தச் சூழலை எதிர்கொள்ள மிகப்பெரிய “கூட்டு முயற்சி” தேவை என தெரிவித்துள்ளது
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
வெனிசுலா துயரம் குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில், ”வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நேரிட்ட பேரழிவு குறித்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இந்திய மக்கள் சார்பில், அந்நாட்டு அரசு, மக்களுக்கு, குறிப்பாகத் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையப் பிரார்த்திப்பதுடன், இந்த இக்கட்டான தருணத்தில், பாதிக்கபட்டுள்ள அனைவருடனும் இந்தியா துணை நிற்கும். சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அவசர நிலை பிரகடனம்
மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும் வெனிசுலா நாடு முழுவதும் தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
உருக்குலைந்த வெனிசுலா
















