நகைப்பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றைய மார்க்கெட் ரேட் இதோ!

By Pandeeswari Gurusamy

|

Published on 25 Jun 2026, 10:29 AM

Gold

சென்னையில் இன்று (ஜூன் 25) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,680 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுc.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.10,000 வரை சரிந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.210 குறைந்து ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.189 குறைந்து ரூ.10,981-க்கு விற்பனை செய்யப்படுகிறது

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.230-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.10,000 சரிந்து ரூ.2,30,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருவது நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தங்கம் மற்றும் வெள்ளியில் தொடர் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
24-6-20261,06,800
23-6-20261,08,480
22-6-20261,08,800
21-6-20261,08,800
20-6-20261,08,800
19-6-20261,08,560
18-6-20261,11,600
17-6-20261,12,240
16-6-20261,12,480
15-6-20261,12,560

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

24-6-2026240
23-6-2026250
22-6-2026255
21-6-2026255
20-6-2026255
19-6-2026255
18-6-2026270
17-6-2026275
16-6-2026275
15-6-2026280

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel