15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று (ஜூன் 24) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி,

சென்னை பெருநகர காவல்துறையின் எஸ்டேட் மற்றும் நலன் (Estate and Welfare) பிரிவில் பணியாற்றி வந்த கண்ணன் ஐபிஎஸ்  தாம்பரம் காவல் தலைமையிட துணை ஆணையராகவும், 

ADVERTISEMENT

தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் வேல்முருகன், சென்னை காவல்துறை தலைமையிட நவீன மயமாக்கல் காவல் கண்காணிப்பாளராகவும்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்டாலின் ஐபிஎஸ் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும்,

ADVERTISEMENT

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரமேஷ்பாபு ஐபிஎஸ், சென்னை, பயங்கரவாத தடுப்பு படை காவல் கண்காணிப்பாளராகவும்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி கீதாஞ்சலி, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு துணை ஆணையராகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுந்தரவல்லி, சென்னை பெருநகர காவல்துறை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும்,

மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் திருப்பூர் நகர வடக்கு துணை ஆணையராகவும்,

தமிழ்நாடு காவல்துறை கமாண்டோ படை எஸ்பி மகேஸ்வரி, ஆவடி ஆணையரக ரெட் ஹில்ஸ் துணை ஆணையராகவும்

கோயம்பேடு துணை ஆணையர் உதயகுமார் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி ஆகவும்,

திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், அடையாறு துணை ஆணையராகவும்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சப் டிவிஷன் ஏஎஸ்பி குணல் உத்தம் சூரத்தே எஸ்பி-ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். மற்றும் கோயம்பேடு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் சப் டிவிஷன் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி, எஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சப் டிவிஷன் ஏஎஸ்பி அன்சுல் நாகர், எஸ்பி-ஆக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மேற்கு துணை ஆணையராகவும்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சப் டிவிஷன் ஏஎஸ்பி அர்பிதா ராஜ்புத் பதவி உயர்வு பெற்று சென்னை குற்றப்பிரிவு சிஐடி (வடக்கு மண்டலம்) எஸ்பி ஆகவும்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் சப் டிவிஷன் ஏஎஸ்பி பனவத் அரவிந்த் பதவி உயர்வு பெற்று திருச்சி நகர வடக்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share