புதன்கிழமை வர்த்தகத்தில் பங்குச் சந்தையின் குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதன்கிழமை புதிய உச்சத்தை தொட்டு உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் தொடர்ந்து 7வது நாளாக உயர்ந்து வர்த்தக முடிவில் 73.80 புள்ளிகள் உயர்வுடன் 81,785.56 புள்ளியிலும், நிஃப்டி தொடர்ந்து 10 வது நாளாக உயர்ந்து வர்த்தக முடிவில் 34.60 புள்ளிகள் அதிகரித்து 25,052.35 புள்ளியில் முடிவடைந்தது.
புதன்கிழமை வர்த்தகத்தில் BSEல் Airtel, IndusInd Bank, Infosys, Sun Pharma, Tech Mahindra, M&M, Bajaj Finance, JSW Steel and TCS நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் Asian Paints, Maruti, Nestle India, Axis Bank, UltraTech Cement, SBI and Bajaj Finserv நிறுவன பங்குகள் சரிவுடனும் முடிந்தன.
டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ரிசோர்ஸ்ஃபுல் ஆட்டோமொபைல் (resourceful auto mobile) நிறுவனம் யமஹா இருசக்கர வாகன சில்லறை விற்பனை டீலராக இயங்கி வருகிறது.
இரண்டு கடைகளையும் 8 ஊழியர்களையும் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம். பங்குச் சந்தையில் 12 கோடிக்கான மூலதன நிதி திரட்டும் IPOவை அறிவித்திருந்தது. ஆகஸ்ட் 29 இன்று இந்நிறுவனத்தின் பங்கு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ள நிலையில்; சுமார் 4700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில். Resourceful auto mobile நிறுவனம் திக்குமுக்காடி உள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட 12 கோடியை ஒப்பிடுகையில் இது 400 சதவீதம் அதிகம் என்றாலும் முதலீட்டாளர்கள் எதன் அடிப்படையில் இந்த IPOவை தேர்வு செய்தனர் என்பதை கண்டு பல்வேறு தரகு நிறுவனங்கள் குழப்பி போய் உள்ளன.
இண்டிகோவின் இணை நிறுவனர் ராகேஷ் கங்வால், இண்டிகோ விமான நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளை. பங்கு ஒன்று விலை 4593 மதிப்பில் சுமார் 6750 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிளாக் டீல் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்கு எண்ணிக்கை அடிப்படையில் இது சுமார் 1 கோடியே 47 லட்சம் பங்குகள் எனவும், இண்டிகோ நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் இது 3.8% என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை வர்த்தகத்தில் இன்டிகோ நிறுவன பங்கு 2.41% உயர்ந்து 4859.20 ரூபாயில் முடிவடைந்தது.
பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து செல்லும் பல நாடுகளுடன் உறவை வலுப்படுத்தும் சர்வதேச அரங்கில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், மேலும் எல்லை தாண்டிய கட்டண முறைகள் உட்பட நிதி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் ரிசர்வ் வங்கி எடுத்து ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக UPI, RuPay போன்ற டிஜிட்டல் பண வர்த்தகத்தை உலகளாவியதாக மாற்றுவதில் கவனம் செலுத்த உள்ளதாக Global Fintech Fest இல் RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்தின் ஒரு பிரிவான டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் புதன்கிழமை சுமார் 2 சதவீதம் வரை சிறிய சரிவைக் சந்தித்து பிஎஸ்இயில் 1078.60 ரூபாயில் முடிவடைந்தது.
TVS Group company நிறுவனத்தின் துணை நிறுவனமான TVS Srichakra Ltd 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு 473.4% ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி பங்கு ஒன்றுக்கு 4.73 ரூபாய் டிவிடெண்ட் வழங்க உள்ளத்தாக இந்நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் TVS Srichakra Ltd பங்கு 0.66% சரிந்து 4736.3 ரூபாயில் முடிவடைந்தது.
இந்த வாரம் வரவிருக்கும் இந்தியாவின் Q1 FY25 GDP தரவுகளின் அடிப்படையில் வரும் வாரத்தில் பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்ற இறக்கத்துடன் பயணிக்கும் என்று பங்குச் சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
தொடர் ஏறுமுகத்தில் பயணித்து வந்த இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று வியாழக்கிழமை சரிவுடன் தொடங்கியது.
காலை முதல் அமர்வில் சென்செக்ஸ் 72 புள்ளிகள் சரிந்து 81,713.71 புள்ளியிலும்.நிஃப்டி 17 புள்ளிகள் சரிந்து 25,035.30 நிலைகளில் தொடங்கியது.
வியாழக்கிழமை காலை முதல் அமர்வில் என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபம் ஈட்டி வருகிறது.
பல்வேறு செய்திகள் காரணமாக Bharti Airtel, Eicher Motors, IEX, Paytm, PFC, REC Reliance AGM, Indigo நிறுவன பங்குகள் இன்று வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.
-மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கலான் படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்
மருத்துவர்களின் பாதுகாப்பு : அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதாரத் துறை முக்கிய கடிதம்!
பாலியல் குற்றச்சாட்டு… நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு!