டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து கடந்த மாதம் புதுவையில் நடத்திய கருத்துகணிப்பின் முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தற்போது உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும், காங்கிரஸ் – திமுக கூட்டணி 17 இடங்களிலும், இதர கட்சிகள் 5 இடங்களிலும் அதிமுக ஒரு தொகுதியிலும், வெற்றி பெறுமென்றும் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாதென்றும் கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்த வரை, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 24.8 சதவீத ஓட்டுக்களும், அ.தி.மு.க.,வுக்கு 11.8 சதவீத ஓட்டுக்களும், காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு 32.8 சதவீத வாக்குகளும், பிற கட்சிகளுக்கு 21.9 சதவீத ஓட்டுக்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









