மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ இன்று, சென்னை தி.நகரில் உள்ள ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்துக்குச் சென்றார். அங்கிருந்த ஆம்ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் வசீகரனைச் சந்தித்து மக்கள் நலக் கூட்டணிக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். இதற்கு ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தங்கவேல், கிருஷ்ணவேணி ஆகியோர் அடங்கிய தன்னார்வலர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். “ஆம்ஆத்மி கட்சியைத் தொடங்கிய காலத்திலிருந்தே நாங்கள் கட்சிக்குள் இருக்கிறோம். கட்சியின் தலைவரை தன்னார்வலர்கள் எல்லோரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், தற்போது தலைவராக சொல்லிக்கொள்ளும் வசீகரன், தானாகவே தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டவர். எனவே, அவர் நடத்தும் பேச்சுவார்த்தை செல்லாது.தவிறவும் ஆம் ஆத்மி கட்சி நேர்மையானது. மக்கள் நலக் கூட்டணி ஊழல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆகவே, அவர்களை ஆதரிக்காமல், தனித்தே தேர்தலைச் சந்திக்கவேண்டும் இதுபற்றி, டெல்லியில் உள்ள கட்சித் தலைமைக்குத் தெரிவிப்போம்” என்றனர்.
வைகோவுடன் பேசியது செல்லாது -ஆம்ஆத்மியில் அதிருப்தி
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








