வாட்ஸ் அப் குரூப்பிற்கே ஆள் பிடிக்கும் அதிமுக

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுகதான் அதிக உறுப்பினர் கொண்ட கட்சியாக தன்னை அறிவித்துகொள்கிறது. அதாவது அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே ஐம்பது லட்சம் என்று தெரிவித்துள்ளது. ஒரு வாட்ஸ் அப் குரூப் துவங்க இரண்டு பேர் இருந்தால் போதும் ஆனால் அதன் அதிகபட்ச உறுப்பினராக, நேற்று வரை 100, இன்று முதல் 256 பேரை வைத்துக்கொள்ளலாம். சமூக ஊடகங்களில் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் ஒரு வழியாக அதிமுகவும் கொஞ்சம் சுறுசுறுப்படைந்து முகநூல் குழு எல்லாம் அமைத்துள்ளது, இருப்பினும் அதற்குள்ளும் பல்வேறு குழுக்களும் உள்ளது. இன்று அதிமுக அனுதாபிகளால் முதல் முதலில் துவக்கப்பட்ட அதிமுக முகநூல் நண்பர்கள் குழு” வினால் வைக்கப்பட்ட வேண்டுகோள் நெட்டிசன்கள் பார்வையில் பட்டு வைரலாக பரவி வருகிறது. “அம்மா புகழ் பரப்ப வாட்ஸ் அப் குரூப்பிற்கு அதிக அம்மா தொண்டர்கள் தேவை” என்று வெளிவந்திருக்கும் வந்த அறிவிப்பு இன்றைய விலாநோக சிரிக்கவைக்கும் வைரல்!,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel