அதிமுகவிடம் இருந்து எந்த ஒரு கட்சிக்கும் முறையாக இதுவரை தேர்தல் கூட்டணி தொடர்பான அழைப்போ அறிக்கையோ இல்லை. திமுக தலைவர் கருணாநிதி பல முறை தேமுதிகவுக்கும், இடது சாரிகளுக்கும் அழைப்பு விடுத்தும் திமுக கூட்டணியில் இரு கட்சிகளுமே இடம் பெறாத நிலையில் அதிமுக மூன்று கட்சிகளுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மனிதநேய மக்கள் கட்சி,பார்வர்டு பிளாக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய மூன்று கட்சித் தலைவர்கள் இன்று மதியம் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச உள்ளதாக அதிமுக கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், கூட்டணி தொடர்பாக பேசப்படும் என்று தெரியவருகிறது. கூட்டணி உறுதியாகுமா? எந்தெந்தக் கட்சிக்கு, எத்தனை தொகுதி என்பது இந்தச் சந்திப்பில் இடம்பெறும்.
மூன்று கட்சித் தலைவர்களை மதியம் சந்திக்கிறார் ஜெயலலிதா!
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








