பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், “புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச்சென்ற 3 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கடந்த 23.3.16 அன்று கடத்திச் சென்றுவிட்டது பற்றி உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் பல தடவை வேண்டுகோள் விடுத்தும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மத்திய அரசு எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் ஜலசந்தியில் தொடர்ந்து மீன்பிடிப்பதை உறுதி செய்யவேண்டியது அவசியமாகும். இதற்காக, 1974, 1976ம் ஆண்டுகளில் இலங்கையுடன் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவேண்டும். கச்சத்தீவையும் இலங்கையிடமிருந்து இந்தியா திரும்பப் பெறவேண்டும். மேலும், இந்தியா–இலங்கை மீனவர்களுக்கிடையே நீண்டகாலமாக உள்ள மீன்பிடி பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காணவேண்டும். 23.3.16 அன்று, இலங்கை கடற்படையால் கடத்திச் செல்லப்பட்ட 1 எந்திரப்படகு உள்பட தற்போது, தமிழக மீனவர்களின் 83 எந்திரப் படகுகள் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ளன. நீண்டநாட்களாக பயன்படுத்தாத காரணத்தாலும், பருவமழை காலத்தில் நனைந்த காரணத்தாலும் அந்தப் படகுகள் சேதமடைந்துள்ளன. 83 படகுகளையும் உடனடியாக இலங்கையிடம் இருந்து மீட்கவேண்டும். மேலும், தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கைச் சிறைகளில் உள்ள 99 தமிழக மீனவர்களையும், வெளியுறவுத்துறை அமைச்சகம்மூலம் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
மீனவர் விடுதலை மீண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








