மாவட்ட ஆட்சியரும்,எஸ்.பியும் ஜெயலலிதாவின் எடுபிடிகள் – வைகோ!

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை சிறுதாவூர் பங்களாவில் பதுக்க கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்றுள்ளனர்.அதிலிருந்த பணமூட்டைகள் இரவோடு இரவாக பங்களாவில் இறக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் 15 லாரிகள் சென்றுள்ளன.இவை தேர்தல் பிரசாரத்திற்காக தயார் செய்யப்பட்ட வாகனங்கள் என்கிறார்கள்.பிரசார வாகனத்தை தயார்படுத்த அதிமுகவிற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? என் காரை கூட சோதனை செய்தார்கள்.எதுவும் இல்லை என்று விட்டுவிட்டார்கள்.தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்த உடனேயே அதிகாலையிலேயே போலீசை அனுப்பி சிறுதாவூர் பங்களாவை சோதிக்காதது ஏன்? மாவட்ட ஆட்சியரிடமும்,எஸ்.பியிடமும் அறிக்கை கேட்டிருப்பதாக தேர்தல் அதிகாரி கூறுகிறார்.அவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் எடுபிடிகள்.இப்போது சிறுதாவூரில் இருந்து பெருமளவு பணம் ஆந்திரா அனுப்பப்பட்டுவிட்டது.” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel