தமிழகத்தின் மின்திட்டங்கள் குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாத சூழல் இருப்பதாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள தமிழக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ”தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை என பியூஷ் கோயல் குற்றம்சாட்டியிருப்பது உண்மை இல்லை. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அரசியல் ஆதாயத்திற்காக வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசியுள்ளார்கள். பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த விஷயத்தில் தவறான பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை – ஓபிஎஸ்
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








