நேற்று திருச்சியில் உங்கள் ஊர் உங்கள் அன்புமணி” கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, ” தமிழகத்தில் நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் உள்ளனர். அதில் ஒருவர் , உட்கார முடியாதவர், ஒருவர் நடக்க முடியாதவர், ஒருவர் நிற்க முடியாதவர். நான் ஒருவன் தான் ஓடி உழைக்கும் நபராக இருக்கிறேன். மக்களுக்கு சேவை புரிய தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சரை தெய்வமாக வழிபடுவதும், அவர் காலில் விழுவதும் திராவிடக் கலச்சாரம். தற்போதைய முதலமைச்சர் மன்னர் போல் ஆட்சி நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு நாடாள வாய்ப்பு கொடுத்ததுபோதும். படித்தவர்களுக்கு இனி வாய்ப்பு கொடுங்கள்” என்று பேசினார்.
நேற்று காலையில் திருச்சியில் பேட்டியளித்த அன்புமணி, “தனிநபர் விமர்சனங்கள் கூடாது. பாமக அப்படியான அரசியலை செய்வதில்லை. நாங்கள் வளர்ச்சி குறித்து பேசும் அரசியலைத்தான் செய்கிறோம்” என்று பேசினார்,”









