மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக-வுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளை பங்கீடுசெய்து கொள்வது தொடர்பாக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். உடன்பாட்டில் ஓரளவு தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தேமுதிக போட்டியிடும் முதல்கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
விருகம்பாக்கம் – பார்த்தசாரதி, சேலம் மேற்கு – மோகன்ராஜ், ஓமலூர் – ஏ.ஆர்.இளங்கோவன், திருச்சி மேற்கு – ஜோசப் ஜெரால்டு, புதுக்கோட்டை – ஜாகீர்உசேன், கன்னியாகுமரி – ஆதிலிங்கபெருமாள், பத்மநாபபுரம் – டி.ஜெகநாதன்.









