திருச்சியில் அமித்ஷா நாளை பிரசாரம்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நாளை காலை டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் அமித் ஷா, காஜாமலை பகுதியில் உள்ள ஓட்டலில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அவர், தொடர்ந்து வேட்பாளர்களுடன் தனித்தனியாக பேச உள்ளார். பின்னர் மாலை ராணுவ மைதானத்தில் நடைபெறும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிவிட்டு அன்றிரவே தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel