தமிழக அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி இணைவால் கூட்டணிக் குழப்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி இதுபற்றி கூறுகையில், தேமுதிக-வுடன் கூட்டணி வைப்பதற்காக கெஞ்சும் அளவுக்கு தமிழக பாஜக சென்றுவிட்டது. இதனால், தமிழக பாஜக தன்னுடைய சுயமரியாதையை இழந்துவிட்டது. திராவிடக் கட்சிகளால் தமிழ்நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. எனவே, தனித்துப் போட்டியிடுவதே பாஜக-வுக்கு நல்லது. வைகோ நிலையாக எந்தக் கூட்டணியிலும் இல்லாதவர்” என்று விமர்சித்துள்ளார்.,”
தமிழக பாஜக சுயமரியாதையை இழந்துவிட்டது – சுப்ரமணிய சுவாமி கடும் தாக்கு
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel









