முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் சிம்லா முத்துச்சோழன் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் 2-வது மருமகள். கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். முதல்வர் ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வெண்ட்டில் படித்த சிம்லா, பிபிஏ., எல்எல்பி முடித்துவிட்டு தற்போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். அவரது கணவர் முத்துச்சோழனும் வழக்கறிஞர்தான். இவரது தாத்தா ‘புனித அந்தோணியார்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றவர். சிம்லா என்பது வித்தியாசமான பெயராக உள்ளதே என அவரிடம் கேட்டபோது, ‘பழனி, டெல்லி என பெயர் வைப்பதுபோல் சிம்லா என பெயர் வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுபோன்று பெயர் வைப்பது வழக்கம்தான்’ என்கிறார் சிம்லா.
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் சிம்லா: சில சுவாரஸ்ய தகவல்கள்
By Balaji
|
Published on 14 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








