அதிமுக பொதுச்செயலாளர் நேற்று தீவுத்திடலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று கூறினார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
மதுவிலக்குக்கு எதிராக பாமக உருவாக்கிய மக்கள் எழுச்சியால் ஜெயலலிதாவுக்கு அச்சம். அதனால் தான் இந்த வெற்று அறிவிப்பு. மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கடந்த 5 ஆண்டுகளில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி இருக்கலாம். தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கூறிவந்த
ஜெயலலிதாவுக்கு இப்போது திடீர் ஞானம் எங்கிருந்து வந்தது? மதுவிலக்குக்கான போராட்டத்தை ஒடுக்கிய அவரின் மதுவிலக்கு அறிக்கையை மக்கள் நம்ப
மாட்டார்கள் என்று பதிவு செய்துள்ளார்.










