தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக தேர்தல் கூட்டணி வைத்ததற்கு, அக்கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் சந்திரகுமார் தலைமையில் 5 சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் தேமுதிக, திமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தி செய்தியாளர்களிடம் பேசினர். இதனையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக அதிருப்தியாளர்கள் தேமுதிகவிலிருந்து நீக்கப்பட்டார்கள். இந்நிலையில், தேமுதிகவிலிருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் மற்றும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இணைந்து சென்னையில் இன்று ‘மக்கள் தேமுதிக’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்கள். கட்சியைத் தொடங்கிவைத்து பேசிய அவர், ‘தேமுதிக முழுவதுமாக பிரேமலதா கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. தேமுதிக தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்ததற்காகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளோம். அதனால், தொண்டர்களின் குரலை ஒலிக்கும் வகையில் மக்கள் தேமுதிக கட்சியைத் தொடங்கியுள்ளோம்’ என்று கூறினார்.
சந்திரகுமார் தலைமையில் ‘மக்கள் தேமுதிக’ உதயமானது
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








