கெயில் விவகாரம் – அதிமுக ஒத்திவைப்பு தீர்மானம்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

கெயில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டம் குறித்து, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கான நோட்டீஸை அதிமுக எம்பி-க்கள் இன்று காலை அளித்தனர். தமிழகத்தில் விளைநிலங்கள்வழியாக எரிவாயுக் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்தக்கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், அதிமுக எம்பி-க்கள் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். விவசாய கோரிக்கை என்பதால் உடனடி விவாதம் தேவை எனவும் கோரினர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என அக்கட்சியின் மக்களவைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். மாநிலங்களவை விவாத நேரத்தில் இலங்கை அரசு கைதுசெய்த தமிழக மீனவர்கள் 68 பேரை விடுதலை செய்யக்கோரியும், இலங்கை கடற்படை கைப்பற்றிய 78 படகுகளை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம்மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்பி-க்கள் கோரிக்கை விடுத்தனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel